Breaking News

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த குட்டியானையை எழுப்ப முயன்ற தாய் யானை.... வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அனை அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை கடக்க முயன்ற மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.



இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த தாய் யானை உயிரிழந்த குட்டி யானை அருகில் சென்று தன் தும்பிக்கையால் தட்டி தடவி எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டதை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். 

வீடியோவை பார்க்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க:-


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback