தமிழக நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு – தகுதியின் அடிப்படையில் பணி நியமனம்! உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை
அட்மின் மீடியா
0
சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு, புதுவை கிழமை நீதிமன்றங்களில் நடைப்பெறும் நேரடி பணி நியமனங்களை பெற்று தருவதாக கூறும் நபர்களை நம்ப வேண்டாம்.
தகுதியின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்ற பணியிடங்கள் நிரப்பப்படும்
என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை
நீதித்துறைகளில் ஆட்கள் சேர்ப்பு கல்வித்தகுதியில் அடிப்படையில் நடத்தப்படுகிறது. சில மோசடி நபர்கள் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு நிரந்தர பணி பெற்றுத் தருவதாக கூறி வேலை தேடுபவர்களிடம் இருந்து பெரும் தொகையை வசூலிப்பதாக தெரிய வந்துள்ளது.
எனவே பொதுமக்கள், அரசு வேலை தேடுபவர்கள் இது போன்ற நபர்களை நம்பி ஏமாற வேண்டாம், மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வு துறைக்கு புகாரளிக்கலாம் என்று உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்