Breaking News

BREAKING கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி -தமிழ்நாடு அரசு

அட்மின் மீடியா
0
பொது இடங்கள், மார்க்கெட், தியேட்டர், பொது மக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் உரிமையாளர்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள் ,கடைகள், திரையரங்குகள் என மக்கள் கூடும் இடங்களில் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது

பொது இடங்கள் சந்தை உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.  

மார்க்கெட் ,தியேட்டர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் பள்ளி கல்லூரிகள் ஆகியவற்றில் தடுப்பது செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும்.  

இதுகுறித்து பள்ளி, கல்லூரி ,தியேட்டர்கள், மார்க்கெட் ,விளையாட்டு ,இதர பொழுதுபோக்குகளில் அவற்றின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.  

பொது இடங்களுக்கு வருபவர்களிடம் உரிய சோதனை நடத்தி, அவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback