விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே காலை 9 மணிக்கு காணொளி வாயிலாக உரையாட தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், "விவசாயிகளின் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன . ஆனால் எங்களால் விவசாயிகளுக்கு புரியவைக்க முடியவில்லை. புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும். அதில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், வேளாண் வல்லுனர்கள் இடம்பெறுவர் என தெரிவித்தார்.
மேலும் விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன; ஆனால், எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லுமாறு பிரதமர் மோடி கூறினார்
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: இந்திய செய்திகள்