எங்கும் அலையாமல் ஆன்லைன் மூலம் மிக எளிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி!!!
எங்கும் அலையாமல் ஆன்லைன் மூலம் மிக எளிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி என இங்கு பார்க்கலாம் வாங்க....
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
முதலில் www.nvsp.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும். அதில் லாகின் என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்
பின் அவற்றில் தாங்கள் ஏற்கெனவே User ID கிரியேட் செய்து வைத்திருந்தால் அதில் User ID மற்றும் password கொடுத்து login செய்து கொள்ளுங்கள்.
இல்லை என்றால் அங்கு Don’t have account, Register as a new user என்பதை கிளிக் செய்து.உங்களுக்கான Account-ஐ கிரியேட் செய்ய வேண்டும்.
Don’t have account, Register as a new user என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு PAGE ஓபன் ஆகும் அதில் உங்களுடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்து அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்
அடுத்து உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP எண் அனுப்பப்படும். அதனை ENTER OTP என்ற இடத்தில் டைப் செய்து Verify என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது தங்களுடைய மொபையில் நம்பர் Verify-ஐ ஆகிவிடும்.அதன் பிறகு I don’t have EPIC number என்பதை கிளிக் செய்து, தங்களுடைய first name, lest name, password, confirm password ஆகியவற்றை டைப் செய்து Register என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்பொழுது தங்களுடைய Account Register ஆகிவிடும். அதன் பிறகு user id & password-ஐ கொடுத்து லாகின் செய்து கொள்ளவும்
அடுத்து புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 என்பதை கிளிக் செய்து
உங்கள் தனிப்பட்ட விவரங்கள் உங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி என அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்
அடுத்து உங்கள் புகைப்படம், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று முதலியவற்றை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்யவும்.
அனைத்து விவரங்களையும் வழங்கி பின்பு, எல்லாம் பூர்த்தி செய்தவுடன் ’Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.
அவ்வளவுதான் தங்களுக்கு ஒரு Reference id கொடுக்கப்படும் அந்த id நம்பரை குறித்து வைத்து கொள்ளவும்.
இந்த நம்பரை வைத்துதான் தங்களுடைய Status-ஐ track செய்து பார்க்க முடியும்.
பின்பு track status என்பதை கிளிக் செய்யுங்கள். பின் அந்த Reference id-ஐ டைப் செய்து track status என்பதை கிளிக் செய்து பார்த்தால் தான் தங்களுடைய விண்ணப்ப நிலை தெரியும்
உங்களுடைய application accepted செய்யப்பட்டால் தங்களுக்கு ஒரு EPIC வரும் அவற்றை எடுத்து கொண்டு. தங்கள் ஊரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம்
இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே எந்தவித கட்டணமுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம்.
Tags: முக்கிய செய்தி