Breaking News

700 கைதிகள் விடுதலை - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

அட்மின் மீடியா
0

பேரறிஞர் அண்ணாவின் 113வது  பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அண்ணா பிறந்தநாளை ஒட்டி நல்லெண்ணம் மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
மேலும் அதில் பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், மத மோதல், சாதி மோதலில் ஈடுபட்டவர்கள், அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback