சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3% இடஒதுக்கீடு - அரசாணை வெளியீடு!
அட்மின் மீடியா
0
சட்டப்பேரவையில் அறிவித்தப்படி வேலைவாய்ப்பில் சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் சிலம்பம் சேர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது 3 சதவீத இடஒதுக்கீட்டில் சிலம்பத்தை சேர்த்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேசிய, மாநில அளவில் சிலம்பப் போட்டியில் சாதனை படைப்பவர்கள் இந்த இடஒதுக்கீட்டால் பயன்பெறுவார்கள்.
Tags: தமிழக செய்திகள்