Breaking News

2015 வெள்ளத்திற்க்கு பிறகு என்ன செய்தீர்கள் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

அட்மின் மீடியா
0
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை மக்வும் பாதிக்கப்பட்டு  சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.




இந்நிலையில்,கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? 

2015ஆம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதற்கு பிறகும் மழைநீர் தேங்காமல் இருக்க என்னதான் செய்துகொண்டிருந்தீர்கள் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி தெரிவித்து சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.


மேலும் குறிப்பாக ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகவில்லை என்றால் தாமாக முன்வந்து வழக்கு தொடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சாலைகளை அகலப்படுத்துவது தொடர்பான பொதுநல வழக்கில் சென்னை மாகராட்சிக்கு உயர்நீதிமன்றம் இத்தகைய கேள்வியை எழுப்பியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this