Breaking News

Election Result Live: ஊரக உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட் ஆன்லைனில் பார்ப்பது எப்படி

அட்மின் மீடியா
0

தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக வாக்குச்சீட்டு முறையில் வாக்குப் பதிவு கடந்த 6 ம்தேதி மற்றும் 9 ம் தேதி நடைபெற்றன. 



இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய 4 பதவிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடந்தது. 

வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது..

உரிய அடையாள அட்டை இன்றி வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. 

செல்போன் போன்றவற்றை வாக்கு எண்ணும் பகுதிக்குள் எடுத்து வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு குறைவான வாக்குகள் என்பதால் இந்த பதவிகளுக்கான முன்னணி மற்றும் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் மதியத்திற்குள் தெரியவரும்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி 20-ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

https://tnsec.tn.nic.in/

https://tnsec.tn.nic.in/result/election_2021/index.php

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback