Breaking News

மெட்ரோ ரயிலில் டோக்கனுக்கு பதிலாக, கியூ.ஆா். கோடு பொறித்த காகித பயணச்சீட்டு

அட்மின் மீடியா
0

மெட்ரோ ரயிலில் டோக்கனுக்கு பதிலாக, கியூ.ஆா். கோடு பொறித்த காகித பயணச்சீட்டு அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

சென்னையில் மெட்ரோ ரயிலில் தொடுதல் இல்லாத பயணத்துக்கான அச்சிடப்பட்ட கியூஆா் குறியீடு பயணச்சீட்டுகளை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

பயணிகள் கவுன்ட்டரிலும், இயந்திரங்கள் வாயிலாகவும் இந்த பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக, 40 நிலையங்களில் இயந்திரங்கள் நிறுவப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback