BREAKING சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு! எவ்வளவு தெரியுமா
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஒரு சிலிண்டர் ரூ . 900.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, மாதத்தில் ஒரு முறை அல்லது இருமுறை மாற்றம் செய்யப்படுகின்றன.
ரூ .875.50 க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.25 அதிகரித்து மானியத்துடன் ரூ.900.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல வணிக பயன்பாட்டிற்கான மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ.75 அதிகரித்து ரூ.1,831.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்