Breaking News

பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

4 சக்கர வாகனங்களில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

 

மத்திய அரசு 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது. 

பொதுமக்களின் நலன் கருதியே பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவை, மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும். அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback