போலி பத்திரபதிவை ரத்து செய்ய இனி பத்திரப்பதிவு தலைவரே போதும் மசோதா நிறைவேறியது
அட்மின் மீடியா
0
போலியான பத்திர பதிவுகளை துறைத்தலைவரே நேரடியாக ரத்து செய்வதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் இந்த சட்டத்தின் மூலம் போலி பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் மூர்த்தி கடந்த வாரம் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இன்று போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இனி போலி பத்திரப் பதிவு செய்திருந்தால் பத்திரப்பதிவு தலைவரே அதை ரத்து செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது.
Tags: தமிழக செய்திகள்