Breaking News

பள்ளியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அச்சம் காரணமாக மரணம்

அட்மின் மீடியா
0
பள்ளியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அச்சம் காரணமாக மரணம்
நீட் தேர்வு சரியாக எழுதவில்லையோ என்ற அச்சத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயலட்சுமி - கருணாநிதி தம்பதியினர். இருவரும் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு கனிமொழி, கயல்விழி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அரியலூரில் உள்ள துளாரங்குறிச்சியில் வசித்துவந்தனர்.

இரண்டாவது மகள் கனிமொழி  நாமக்கல்லில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து, 12ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.

இதையடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பிய கனிமொழி, கடந்த 12ஆம் நீட் தேர்வை எழுதினார். 

ஆனால், அந்தத் தேர்வை சரியாக எழுதவில்லையோ என கனிமொழி மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

கனிமொழியை பெற்றோர் தொடர்ந்து தேற்றிவந்தனர். திங்கட்கிழமையன்று பெற்றோர் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றனர். இரவு எட்டு மணியளவில் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, மாணவி கனிமொழி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
 அதன் பின்  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவியின் உடலை போஸ்மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தார்கள்

நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அச்சம் காரணமாக தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback