கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்கார இருக்கை வசதி கட்டாயம்: தமிழக அரசு முடிவு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் இன்று சட்டமன்றத்தில்
கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நின்று கொண்டே பணிபுரிகின்றார்கள் அவர்கள் உட்கார இருக்கை வசதிகூட சில இடங்களில் இல்லை
இதனால் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை திருத்தம் செய்வதென முடிவு செய்து சட்டத்திருத்தம் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்