Breaking News

பம்பர் டூ பம்பர் காப்பீடு உத்தரவை வாபஸ் வாங்கிய உயர்நீதிமன்றம்!

அட்மின் மீடியா
0

செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய வாகனங்களுக்கு பம்பர் டூ பம்பர் காப்பீட்டு பாலிசியை 5 ஆண்டுக்கு கட்டாயம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் அவர்கள் கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற காப்பீட்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன என்வும் இவ்வழக்கில் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலை சேர்க்க வேண்டும். எனவும் ஆணையத்தின் உரிய ஒப்புதல் பெற்ற பின், கணினியில் உரிய மாறுதல் செய்ய 3 மாதம்  அவகாசம் வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில், காப்பீட்டு நிறுவனங்கள் அமைப்பின் கோரிக்கையை ஏற்று 'பம்பர் டூ பம்பர்' காப்பீடு கட்டாயம் எனும் உத்தரவை திரும்பப் பெறுவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போக்குவரத்துத்துறை இதற்கென பிறப்பித்த சுற்றறிக்கையும் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback