தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கலான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஐ.முகமது ரஷ்வி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்:
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தமிழகத்தில் சிலர் இறந்துள்ளனர். எனவே, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் நடித்த திரைப்பட நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசுவாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பின்னர் தலைமை நீதிபதி, மனுதாரர் கோரிக்கை தனிநபர் ஒழுக்கம் சார்ந்தது. மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து நிவாரணம் தேடியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் உரிய இடத்தில் முறையிட்டு நிவாரணம் தேடிக் கொள்ளலாம்,'' என்றனர்.
Tags: தமிழக செய்திகள்