Breaking News

மெரினாவில் படகு சவாரி தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சென்னை மெரினா கடற்கரையில் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தமிழக சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது.

 


தமிழக சட்டப்பேரவையில் இன்று சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் சுற்றுலாத் துறை சார்பில் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் கன்னியாகுமரியல் அமைந்துள்ள 133 அடி திருவள்ளுவர் சிலையை மேலும் அழகூட்டும் வகையில் சுற்றுலாப் பயணிகள் இரவிலும் கண்டு மகிழ லேசர் தொழில்நுட்ப உதவியுடன் முப்பரிமாண ஒளியூட்டம் அமைக்கப்படும் எனவும்

உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் இராயல் மெட்ராஸ் யாட் கிளப் படகு, சவாரி மோட்டார் படகு, அதிவிரைவு படகுகள் மற்றும் பொழுதுபோக்கு படகுச் சவாரி தொடங்கப்படும்.என  அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback