Breaking News

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கபட்ட முக்கிய அறிவிப்புகள்

அட்மின் மீடியா
0

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் அறிவிக்கபட்ட முக்கிய அறிவிப்புகள் 



சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பும், வழிகாட்டுதலும் வழங்கச் சுற்றுலா காவல்துறை அமைக்கப்படும் 

போலி பத்திரபதிவை ரத்து செய்ய இனி பத்திரப்பதிவு தலைவரே போதும் மசோதா நிறைவேறியது

சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தாக்கல்: நிறைவேற்றம்

மெரினாவில் படகு சவாரி தமிழக அரசு அறிவிப்பு

கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்கார இருக்கை வசதி கட்டாயம்

பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்

தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்

சி.ஏ.ஏ.சட்டத்தை நீக்கக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

அரசுப் பணிகளில் மகளிர் இடஒதுக்கீடு 30% இல் இருந்து 40% ஆக உயர்வு!

பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைக் காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க கைப்பேசி செயலி உருவாக்கப்படும் 

அயோத்திதாசரின் 175வது ஆண்டு விழாவின் நினைவாக வட சென்னை பகுதியில் அவருக்கு மணிமண்டபம்  அமைக்கப்படும்.

தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சு, கழிவு மீதான 1 சதவீத வரி ரத்து செய்யப்படும்.

காவல்துறையினர் பேருந்துகளில் பயணிக்க வசதிகள் செய்து தரப்படும் 

அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி, 700 ஆயுள் தண்டனை கைதிகளை நல்லெண்ணம் அடிப்படையில் விடுதலை செய்ய அரசாணை வெளியிடப்படும் 

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குட்பட்ட நகைக் கடன்கள் அனைத்தும் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் 

சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில்முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்.

தந்தைப் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாள் ஆகக் கொண்டாடப்படும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும்.

தமிழ்நாடு ஆதி திராவிடர் – பழங்குடியினர் நல ஆணையம்  என்கிற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.

Give Us Your Feedback