சர்வதேச விமான போக்குவரத்து அக்., 31 வரை தடை தொடரும்
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை, அக்., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது.
அதே நேரத்தில் வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை, அக்., 31 வரை நீட்டிக்கப்படுவதாக, விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகம் அறிவித்துள்ளது
சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய ஒப்புதல்களுடன், சில குறிப்பிட்ட மார்க்கங்களில் மட்டும் விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்