தமிழகத்தில் 32 சுங்கசாவடிகள் கண்டிப்பாக நீக்கப்படும்; சட்டமன்றத்தில் அமைச்சர் எ.வவேலு தகவல்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ல் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்கள் தமிழகத்தில் அதிகமாக இருக்கும் சுங்கச்சாவடிகளை நீக்ககோரி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.
அந்த தீர்மானத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வவேலு அளித்த பதிலில் தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்கவேண்டும். ஆனால், 48 சுங்கச்சாவடிகள் இருக்கிறது.
ஒன்றிய அரசின் சட்டத்திலேயே குறிப்பிட்ட விதிமுறைகளை மீறி தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்படுகிறது.மேலும் குத்தகை காலம் முடிந்த பிறகும் சில சுங்க சாவடிகள் செயல்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் 32 சுங்கச்சாவடிகளை நீக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்
Tags: தமிழக செய்திகள்