12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு 13ம் தேதி வெளியிடு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக செப். 13ம் தேதி வெளியீடு
தமிழகத்தில் 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் செப். 13ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் துணைத்தேர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து, முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசுத் தேர்வுகள் இயக்குநர் துணைத்தேர்வு முடிவுகள் குறித்து, 2021 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக 13.09.2021 (திங்கள்கிழமை) காலை 11.00 மணி முதல் இணையத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.
Tags: கல்வி செய்திகள்