தமிழகத்தில் விரைவில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சுமார் 1 வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.
மேலும் விரைவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து 15ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பின்பு பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவு எடுப்பார் . என கூறினார்\
Tags: தமிழக செய்திகள்