RTE மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 13 வரை அவகாசம் நீட்டிப்பு
அட்மின் மீடியா
0
RTE மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும்
சுயநிதி மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் சுமார் 25% இட ஒதுக்கீடு வழங்கும்
சட்டமே கட்டாய கல்வி உரிமை சட்டமாகும்.
இந்த சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை இச்சட்டத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கலாம்.
இச்சட்டத்தின் மூலம் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புவோர்கள் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் 25% ஒதுக்கீட்டின் கீழ் இலவச சேர்க்கை என்பது கட்டாயமானது. இதற்கான கட்டணத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றனர்.
தனியார் பள்ளிகளில் இலவச & கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இன்றுடன் முடிவடைய இருந்தநிலையில் தற்போது கால அவகாசத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கல்வித்துறை.அதன்படி ஆக்ச்டு 13 வரை விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிப்பது எப்படி? முழுவிவரம் தெரிந்துகொள்ள
Tags: தமிழக செய்திகள்