Breaking News

BREAKING: தடகள போட்டியில் பங்கேற்க்க சமீஹா பர்வீனை போலந்து அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அட்மின் மீடியா
0

போலந்து நாட்டில் நடைபெறக்கூடிய தடகளப் போட்டியில் கலந்து கொள்வதற்கு கன்னியாகுமரியை சார்ந்த செவித்திறன் குறையுடைய சமீஹா பர்வீன் தகுதி பெற்றார். 


 

தகுதி பெற்றவர்களில் நான்கு பேர் ஆண்கள் எனவும், இவர் ஒருவர் பெண் என்பதால் அவர்களுடன் இணைத்து அனுப்ப முடியாது என்று தேசிய விளையாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. 

இதனால், போலாந்து சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பர்வீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தேசிய விளையாட்டு ஆணையம் அளித்த பதிலில் தடகளத்தில் தகுதி சுற்றில் 8வது இடம் பிடித்ததால் தான் வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் பெண் என்றதால் வாய்ப்பு மறுக்கப்பட்டது என கூறுவது தவறு என தெரிவித்தனர். 

இதைஏற்க மறுத்த நீதிபதி தடகள தகுதி சுற்றில் சமீஹா பர்வீன் 8வது இடம் பிடித்தாலும் பெண்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். எனவே போலாந்து நாட்டிற்கு பங்கேற்பதற்கு சமீஹா பர்வீன் அழைத்துச் செல்ல வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback