சவூதி அரேபியாவில் குகை முழுவதும் குவிந்து கிடந்த எலும்பு கூடுகள் முழு விவரம்.....வீடியோ
சவுதி அரேபியாவில் உள்ள உம்மு ஜிர்சான் பகுதியில் சுமார் 1.5 கிலோ மீட்டர் அளவில் உள்ள குகை முழுவதும் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குகை பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் போது வெளியேறிய லாவா குழம்பால் ஆனது என்று கூறுகின்றனர்.
இங்கு சுமார் 1,917 மேற்பட்ட எலும்பு கூடுகள் குவிந்து கிடந்துள்ளது.இதனை பரிசோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள் ஒட்டகங்கள், கழுதை, புலிகள் போன்ற விலங்குகளின் எலும்பு கூடு மட்டும் இல்லாமல் ஒரு சில மனித எலும்புகள் மற்றும் மண்டை ஓட்டின் எச்சங்களும் உள்ளதாக கூறியுள்ளனர்.
இங்கு கிடைத்துள்ள எலும்புகளில் உள்ள வெட்டுக்கள், கீறல்கள் போன்ற அடையாளங்களை கொண்டு ஆய்வு செய்ததில், இந்த எலும்புகள் அங்கு உள்ள கழுதைபுலிகளால் சேகரிக்கப்பட்டவை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
Tags: வைரல் வீடியோ