சவூதி அரசாங்கம் பற்றி பேஸ்புக்கில் அவதூறு பதிவிட்ட கர்நாடகாவை சேர்ந்த ஹரிஷ் சவூதி சிறையில் இருந்து விடுதலை
சவூதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் வெறுக்கத்தக்க அளவில், பதிவிட்டு கைதான கர்நாடகாவை சேர்ந்த ஹரீஷ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஹரிஷ் பங்காரா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஏ.சி. மெக்கானிக் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருமானத்திற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். அப்போது, ஹரிஷ் பங்காரவை அந்த நாட்டு போலீசார் இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு எதிராகவும், சவுதி அரேபிய அரசிற்கு எதிராகவும் அவதூறாக பதிவிட்டதாக கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி கைது செய்தனர்.
இதன் காரணமாக அவரை டிசம்பர் 20, 2019 அன்று சவுதி பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.கைதான ஹரீஷை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர் நிரபராதி என்றும், ஹரீஷின் மனைவி இந்திய தூதரகம் மூலம் முயற்சி மேற்கொண்டார். மேலும் ஹரீஷின் ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டு இவ்வாறு விரோதமாக பதிவிட்டு சிக்க வைக்கப்பட்டதாகவும் ஹரீஷின் மனைவி இந்தியாவில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து விசாரித்த கர்நாடக போலீசார் ஹரீஷின் ஃபேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சவூதியில் உள்ள மங்களூர் சங்கத் தலைவர் ஷெரீப், நுஸ்ரதுல் மசாகின் என்ற அமைப்பும், இன்னும் பிற தன்னார்வலர்களும் ஹரீஷை விடுதலை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.இவற்றிற்கான ஆவணங்கள் இந்திய தூதரகம் மூலம் சவூதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம் ஹரீஷை விடுதலை செய்தது. இதனை அடுத்து மார் 600 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு, சவுதி அரேபியாவில் இருந்து நேற்று பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கர்நாடகம் திரும்பிய அவரை அவரது மனைவி ஆனந்த கண்ணீருடன் கட்டித்தழுவி வரவேற்றார். ஹரிஷ் பங்காராவிற்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
Tags: தமிழக செய்திகள்