பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் எங்கு நடந்தது ? யார் அவர்? முழு விவரம்...
வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் பச்சிளம் ஆண் குழந்தையை பெண் ஒருவர் சித்ரவதை செய்யும் காட்சிகள் வெளியாகி இருப்பது பார்த்தவர்கள் மனதை பதற வைப்பதாக உள்ளது
அந்த சம்பவம் எங்கு நடந்தது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (26). கூலி தொழிலாளியான இவர், ஆந்திர மாநிலம், சித்தூர் தாலுகா, ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி (23) என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு 4 மற்றும் 2 வயதில் என இரு மகன்கள் உள்ளனர்.
இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்கள். துளசி ஆந்திராவில் உள்ள அவரது தாயார் வீட்டில் உள்ளார் .
கணவருடன் பிரிந்த ஆத்திரத்தில் பெற்ற தாய் என்றும் பாரமால் தன் குழந்தையை கொடுரமாக அடித்து துன்புறுத்தி அதனை வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோக்கள் அனைத்தும் சுமார் 1/2 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஆகும்
தற்போது குழந்தை தந்தையின் பொறுப்பில் நலமாக உள்ளது.
மேலும் வீடியோ வைரலானதை தொடர்ந்து குழந்தை கண்மூடித்தனமாக தாக்கிய தாய் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு:-
https://www.facebook.com/watch/?v=853444645281797
நன்றி புதிய தலைமுறை
Tags: தமிழக செய்திகள்