கொடைக்கானலில் மேலும் கட்டுப்பாடுகள்-தற்காலிக கூடாரம் அமைத்து தங்க கூடாது முழு விவரம்
அட்மின் மீடியா
0
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோவிட்19 மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் மாவட்ட ஆட்சியர் திரு விசாகன் அறிவிப்பு
கொடைக்கானல் வட்டத்தில் எங்கும் தற்காலிக கூடாரம் அமைத்து தங்க கூடாது.தங்குவோர் மீது நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை
கூக்கால் நீர்வீழ்ச்சி,பசுமை பள்ளதாக்கு உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல தடை.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து வரக்கூடிய நபர்கள் 72 மணிநேரத்திற்குள் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் அல்லது 2 முறை தடுப்பூசி செலுத்தி கொண்ட விபரத்தினை சோதனைச் சாவடிகளில் காண்பிக்கபட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடுகள் அனைத்தும் கொரோனா நோய் தடுப்பு செய்யும் காரணத்திற்காக மூடப்பட்டு உள்ளது.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கூக்கால் நீர்வீழ்ச்சி, ஐந்து வீடு நீர் வீழ்ச்சி (பேத்துப்பாறை), வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, பசுமை பள்ளத்தாக்கு, டால்பின் முனை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்