ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு வாரிய சொத்துகளை மீட்கும் நடவடிக்கை தொடக்கம்: தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வக்பு வாரியத்தின் சொத்துக்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைர் எம். அப்துல்ரஹ்மான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில், வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பு பல இடங்களில் செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதனை மீட்கும் பணியில் தற்போது ஒன்றினைந்து ஈடுபட்டு வருகிறோம். அரசியல் தலையீடு இன்றி அனைத்து செயல்பாடுகளும் நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்
Tags: தமிழக செய்திகள்