நாளை முதல் திறக்கப்படுகிறது வண்டலூர் உயிரியல் பூங்கா!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு புதிய தளர்வுகளை அறிவித்தது.
ஊரடங்கு தளர்வுகளாக கடற்கரை மற்றும் பூங்காக்களில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், நேற்று முதல் அனைத்து சுற்றுலா தலங்களும், உயிரியல் பூங்காக்களும் திறக்கப்பட்டன. ஆனால் வண்டலூர் உயிரியல் பூங்கா மட்டும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், நாளை முதல் வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படுவதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்