ரேசன் கடைக்கு செல்ல முடியாத முதியோர்களுக்கு பதிலாக யார் ரேஷன் பொருள்களை வாங்கலாம்? உணவுத்துறை அமைச்சர் விளக்கம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் அமர்வு தொடங்கியது. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது,
குடும்பத்தில் இருக்கும் வேறு நபர்கள் யாரேனும் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குடும்ப தலைவரின் கடிதம் கட்டாயம் தேவை என்று கூறியுள்ளார்.
வயதான , உடல்நிலை சரியில்லாதோருக்கு பதிலாக ஐந்து வயதை கடந்த யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெறலாம் .
ஆனால் அதற்கு குடும்பத் தலைவர் கடிதம் அளித்தல் அவசியம். அப்படி அளிக்கும்பட்சத்தில் கைரேகையை வைத்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்