Breaking News

மனிதாபிபானம் இல்லாத கொடூரம்! லாரியின் பின்னால் கட்டி இழுத்துச் சென்று பழங்குடியின நபர் கொலை!! வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள நீமுச் மாவட்டத்தில் கன்ஹையாலால் பீல் என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது .அதில் , வாகனத்தில் இருந்த பால் கேன் சாலையில் விழுந்து பால் முழுவதும் கீழே கொட்டியது . 


இதனால் ஆவேசமடைந்த அந்த நபர் கன்ஹையாலாலை அடித்துள்ளார் . மேலும் தனது நண்பர்களை அங்கு வரவழைத்து , அவரின் கை , காலை ஒன்றாகக் கட்டியுள்ளார் .பின்னர் அந்த கயிறை லாரியில் கட்டி வாகனத்தை ஓட்டிச் சென்றனர் . 

இதில் அவர் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார் . இதனால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது . பின்னர் சில கிலோமீட்டர் இழுத்து சென்ற பிறகு அவரை சாலையின் ஓரேம் வீசிவிட்டுச் அந்த கும்பல் சென்றுவிட்டது .

இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர் . இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்ஹையாலா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் .  இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, 5 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.


https://twitter.com/Pradeep_tk/status/1431724296087293954



Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback