முன்பதிவு ரயில் டிக்கெட்டை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றும் வசதி பற்றி தெரியுமா!
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு அதை ரத்து செய்யாமல் வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றும் வசதியை ரயில்வே துறையில் உள்ளது அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்
எந்த டிக்கெட்டை எப்படி மாற்றுவது
ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட் உங்களிடம் உள்ள நிலையில் சில முக்கியமான காரணங்களால் உங்களால் பயணிக்க முடியவில்லை என்றால், இந்த டிக்கெட்டை உங்கள் குடும்பத்தில் உள்ள வேறு ஒருவருக்கோ அல்லது தேவைப்படும் வேறு நபருக்கோ மாற்றலாம்.
தனிப்பட்ட நபர் ஒருவர் பயணத்தை ரத்து செய்ய வேண்டி இருந்தால் 24 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பிக்கவேண்டும்
திருமணம் உள்ளிட்ட நிகழ்வு களுக்கு குழுவாகச் செல்ல நினைத் தவர்களில் யாரேனும் சிலர், தங்களது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அந்த பயணக் குழு வின் தலைவர் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கடிதம் அளித்து, டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக் கொள்ள முடியும்.
இதேபோல, பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுவாக பயணம் செல்ல முன்பதிவு செய்து, அதில் யாரேனும் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் 48 மணி நேரத்துக்குமுன் தொடர்புகொண்டு, தங்களது பயண டிக்கெட்டை சக மாணவருக்கு மாற்றித் தரலாம். இதற்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது தலைமைஆசிரியர் சார்பில் கடிதம் அளிக்க வேண்டும்.
தேசிய மாணவர் படையில் (என்சிசி) உள்ள மாணவர்கள் குழுவாக பயணிக்க முன்பதிவு செய்து, யாரேனும் வர இயலாவிட்டால, சக மாணவருக்கு பயண டிக்கெட்டை பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.
பயணி ஒரு அரசு ஊழியராக இருந்தால், அவர் தனது பணி நிமித்தமாக செல்கிறார் என்றால், அவர் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்கவேண்டும்
சிறப்பம்சம்:-
இவ்வாறு டிக்கெட்டில் பெயரை மாற்றம் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை.
ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்.
அந்த டிக்கெட்டை பெற்றுக் கொண்ட அந்த நபர் , வேறொரு நபருக்கு மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு மாற்றுவது எப்படி ?
ஒரு கடிதம் எழுதி கொள்ளுங்கள் அதில் காரணம் குறிப்பிட்டு தனக்கு பதில் தந்தை, தாய், சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன் அல்லது மனைவிக்கு பயண முன்பதிவை மாற்றித்தர
டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
அருகில் உள்ள ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டருக்கு செல்லவும்
யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட வேண்டுமோ, அவரது, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அவரது அடையாளச் சான்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
கவுண்டரில் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும்.
அதற்குப் பிறகு, பயணிகளின் பெயர் டிக்கெட்டில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பயணம் செய்பவரின் பெயர் சேர்க்கப்படும்.
Tags: தமிழக செய்திகள்