மக்களே.. இதை பண்ணலன்னா உங்கள் குழந்தையின் ஆதார் கார்டு செல்லாது..!
ஆதார் அமைப்பு குழந்தைகளுக்கான ஆதார் விஷயத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பால் ஆதார் எனப்படும் குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பயோ மெட்ரிக் விவரங்கள் 5 வயதில் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி அப்டேட் செய்யப்படாவிட்டால் அந்த ஆதார் கார்டு செயலிழந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது குழந்தைக்கு 5 வயதானதும், ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று குழந்தைகளின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழியை பதிவு செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.அவ்வாறு செய்யாவிட்டால், பால் ஆதார் அட்டை செல்லாது என ஆதார் தன் டிவிட்ட்ர் பக்கத்தில் கூறியுள்ளது
https://twitter.com/UIDAI/status/1420209896767692803
#AadhaarChildEnrolment #BaalAadhaar can only be used up to the age of 5 years. It becomes inactive if the biometrics of the child are not updated at the age of 5 years. You can visit your nearest #AadhaarEnrolment Centre: https://t.co/oCJ66DD0fK & update child's biometrics pic.twitter.com/YHKxGbWRJQ
— Aadhaar (@UIDAI) July 28, 2021
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி