Breaking News

உள்ளூர் விமான கட்டணங்கள் அதிரடியாக உயர்வு முழு விவரம்

அட்மின் மீடியா
0

உள்நாட்டு விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சக் கட்டணம் உயர்த்தப்படுகிறது  என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது:



உள்நாட்டு விமான போக்குவரத்தில் 40 நிமிடங்களுக்குள்ளான பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 2,600 ரூபாயாக இருந்தது; இது, 2,900 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. 

அதேபோல் 40 - 60 நிமிடங்கள் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்சக் கட்டணம் 3,300 ரூபாயிலிருந்து 3,700 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. 

60 - 90 நிமிடம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 4,500 ரூபாயாகவும்,  

90 - 120 நிமிடம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்சக் கட்டணம் 4,700 ரூபாயிலிருந்து, 5,300ஆக அதிகரிக்கப்படுகிறது. 

120 - 150 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 6,100 ரூபாயிலிருந்து, 6,700 ரூபாயாகவும், 

150 - 180 நிமிடங்கள் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 7,400 ரூபாயிலிருந்து 8,300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. 

180 - 210 நிமிடங்கள் வரை பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 8,700 ரூபாயிலிருந்து, 9,800 ரூபாயாக  உயர்த்தப்படுகிறது. 

என தெரிவித்துள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback