தமிழகத்தில் இன்று நிழல் இல்லாத நாள்.! பார்க்க மறக்காதீங்க...!
நிழல் இல்லாத நாள் என்றால் என்ன?
சூரியன் நம் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். சூரியன் செங்குத்தாக வரும்போது, ஓரிடத்திலுள்ள ஒரு பொருளுடைய நிழலின் நீளம், பூஜ்ஜியமாகிறது.
பூஜ்ஜிய நிழல் நாளில் நிழலானது வழக்கமாக விழும் நிழலை விட வித்தியாசமானதாக இருக்கும். அதாவது மற்ற நேரங்களில் சிறிது பக்கவாட்டில் விழும் நிழல் சரியாக நேராக விழும். இதற்கு சூரியனின் கதிர்கள் பூமியின் பூமத்தியரேகையின் மீது சரியாக விழுவது தான் காரணம். சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழுவதால் நிழலானது பொருளைவிட்டு விலகிச் செல்லாமல் நேராக விழுகிறது. அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிகழவு தினமும் நிகழுமா?
மேலும் இதுபோல் சூரியன் சரியாக தலைக்கு மேல் தினமும் வருவதில்லை. சூரியனின் வட நகர்வு நாள்களில், ஒரு நாளும், தென் நகர்வு நாள்களில் ஒரு நாளும் என ஆண்டுக்கு இருமுறை மட்டுமே இது போல் வரும். மேலும் இந்த அதிசய நிகழ்வானது உலகில் அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை.
உங்கள் பகுதியில் நிழல் இல்லா நாள் என்று ஏற்படும்:-
Zero Shadow Day (ZSD) என்ற செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நிழல் இல்லா நாள் குறித்த ஏராளமான தகவல்கள் இதில் உள்ளன. அது மட்டுமல்ல, அதில் உள்ள ZSD Finder மூலம் இந்திய வரைபடத்தில் உங்கள் ஊர் அமைந்துள்ள இடத்தைத் தொட்டால் அங்கு நிழல் இல்லா நாள் எந்த தேதிகளில் ஏற்படும் என்று காட்டும்.
ஆப் இன்ஸ்டால் செய்ய:-
https://play.google.com/store/apps/details?id=com.alokm.zsd&hl=en_IN&gl=US
சரியாக பகல் 12 மணிக்குத்தான் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகும். அதனை நீங்கள் இன்று சென்னை ,காஞ்சிபுரம், வேலூர்,கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பார்க்கலாம்
Tags: தமிழக செய்திகள்