Breaking News

தமிழ்நாட்டில் இன்று இந்த 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்.. எந்த மாவட்டம் தெரியுமா

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 2-3 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 4மாவட்டங்களில்கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 29.08.2021 ம் தேதி:-

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்


30.08.2021 ம் தேதி:-
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

31.08.2021

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி

01.09.2021

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



மேலும் விவரங்களுக்கு:-

http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback