செப்.1 முதல் பள்ளிகள் திறக்க உள்ளது முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் (Standard Operating Procedure) பின்பற்றிப் பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக் கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்