குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 வழங்கும் திட்டத்துக்கு குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவை இல்லை
குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000 வழங்கும் திட்டத்துக்கு குடும்ப தலைவர் பெயரை மாற்ற தேவை இல்லை
சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் மிகவும் முக்கியமானது. குடும்பத்தலைவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே ரூ.1,000 கிடைக்கும் என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
இல்லத்தரசிகளுக்கு உதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதற்காக குடும்ப தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை என கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்