Breaking News

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடப் பகுதிகள் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடப்பகுதிகள் குறைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். 

 


அதன்படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை 50 முதல் 46 சதவீத பாடப்பகுதிகள் குறைக்கப்படுகின்றன. 

9 முதல் 12ம் வகுப்பு வரை 35முதல் 38 சதவீத பாடப்பகுதிகள். குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட இருக்கும் நிலையில், மாணவர்களை மனதளவில் தயார் படுத்தும் வகையில் 45 முதல் 50 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Share this