Breaking News

BREAKING: திறந்தநிலை கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களுக்கு அரசுதுறையில் பதவி உயர்வு கிடையாது - உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

திறந்தநிலை கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அரசு துறைகளில் பதிவு உயர்வு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு. 

 

 

பத்திரப்பதிவு துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளர் ஆக தேர்வு செய்யப்பட்ட செந்தில்குமார் துறைரீதியாக நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் கூட தனக்கு முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்தும், தனக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட கோரிக்கை விடுத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் திறந்தநிலை கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என்றும் தொலைதூர கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்ததால் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback