ராமநாதபுரம் அருகே மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது வழக்குப்பதிவு
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் எஸ்.எம்.நகரைச் சேர்ந்தவர் செய்யது முகமது (35).இவரது மனைவி அனீஸ் பாத்திமா(32). இவர்களுக்கு 10ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், குழந்தைகள் எதுவும் இல்லை.
குழந்தை இல்லாத காரணத்தால் மற்றொரு திருமணம் செய்துகொள்ள தனது மனைவியை விவாகரத்து செய்ய ஜமாத்திடம் மனு அளித்திருந்தார் ஆனால் ஜமாத்தார்கள் இது தொடர்பாக எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை.
எனவே செய்யது முகமது தன் உறவினர்களுடன் அனீஸ் பாத்திமா வீட்டுக்குச் சென்று அவரிடம் முத்தலாக் கூறியுள்ளார். இதுகுறித்து அனீஸ் பாத்திமா திருவாடானை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் செய்யது முகமது, மீதும் அவரது உறவினர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்