தமிழ்நாடு பாஜக தலைவராக கே.அண்ணாமலை நியமனம்!
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு பாஜக தலைவராக கே.அண்ணாமலை நியமனம்!
தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த வந்த எல்.முருகன் அவர்களுக்கு நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தில் மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அவர் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் காலியாக இருந்த தமிழக பாஜக தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கபட்டுள்ளார்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை தி.மு.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் அவர் பா.ஜ.கவில் இணைந்து ஒரு வருடத்துக்குள் தமிழக பாஜக தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்