உதவிதொகையுடன் இலவச ஐ டி ஐ படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம்
சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான இலவசத் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளின் எதிர்காலம் சிறக்க NCVT சான்றிதழ் உடன் கூடிய தொழிற்பயிற்சி கீழ்க்காணும் தொழிற் பாடப் பிரிவுகளில் அளிக்கப்படுகிறது.
சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும் மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து,
மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்களை அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும்
வயது வரம்பு
இந்தப் பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும்.
பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.
கல்விதகுதி:
8-ம் வகுப்பு
10-ம் வகுப்பு
மாணவ மாணவிகளுக்கான சலுகைகள்
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு
இலவச சீருடை,
இலவச பஸ் பாஸ்
பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக
இலவச மடிக்கணினி
பாட பிரிவுகள்:
தேவையான ஆவணங்கள்
பள்ளி மாற்றுச் சான்றிதழ்,
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்,
சாதிச் சான்றிதழ்
ஆதார் கார்டு
குழாய் பொருத்துநர் (Plumber) பாடப்பிரிவுக்கு 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
விண்ணப்பிக்க:
விண்ணப்பப் படிவம் மற்றும்
தகவல் தொகுப்பைப் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதள முகவரி
www.chennaicorporation.gov.in அல்லது தொழிற்பயிற்சி நிலைய இணையதள முகவரி
gccapp.chennaicorporation.gov.in/cciti/ மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ராயப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி
தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம்,
முத்தையா தெரு அருகில்,
லாயிட்ஸ் காலனி,
ஐஸ் அவுஸ்,
ராயப்பேட்டை,
சென்னை-14.
தொலைபேசி எண் : 044 - 28473117.
(பேருந்து நிறுத்தம்: ஐஸ் அவுஸ் காவல் நிலையம் அல்லது எல்லோ பேஜஸ். )
அதிகாரபூர்வ அறிவிப்பு
https://chennaicorporation.gov.in/news/news_20210710_1.pdf
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ள சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK:
https://www.facebook.com/ADMIN-MEDIA-843847922378949/
TWITTER:
https://twitter.com/adminmedia1
PLAY STORE APP
https://play.google.com/store/apps/details?id=in.adminmedia&hl=en_US&gl=US
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்