ஊரடங்கு நீட்டிப்பா...? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை...!
தமிழ்நாடு அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.கொரோனா பாதிப்பு வாரியாக மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தனித்தனியாக தளர்வுகளை அறிவித்தது.
இதன்படி 27 மாவட்டங்களில் பேருந்து உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 5-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவதால், மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துக்கிறார். இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர், பொதுத்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆலோசனைக்குப் பின்னர், அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்