75 சதவீத கட்டணம் மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அட்மின் மீடியா
0
தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட செய்தி குறிப்பில்:
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்.
முதற்கட்டமாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் 40 சதவீதமும்,
பள்ளிகள் தொடங்கி இரண்டு மாதத்திற்குள் மீதமுள்ள 35 சதவீத கட்டணத்தையும் வசூலித்துக் கொள்ளலாம்.
மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை பெருந்தொற்றை கருத்தில் கொண்டு வசூலிப்பது குறித்து பின்பு அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கபட்டுள்ளது
மேலும் விவரங்களுக்கும் புகாருக்கும் பள்ளிக் கல்வித்துறை புகார் எண் 14417-ஐத் தொடர்பு கொள்ளலாம்
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்