அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
22.07.2021 மற்றும் 23.07.2021 ஆகிய 2 நாட்களுக்கு
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் ,வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் , கன்னியாகுமரி மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடன் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
24.07.2021 அன்று
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி ,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்கள் ,வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
25.07.2021 மற்றும் 26.07.2021
வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
Tags: தமிழக செய்திகள்