Breaking News

அதிர்ச்சி ATM ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 கட்டணம்; ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் புதிய விதிமுறைகள் ஆகஸ்டு 1 முதல்

அட்மின் மீடியா
0

ஐசிஐசிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பணப் பரிவர்த்தனைகள், ஏடிஎம்மில் பணம் எடுத்தல், செக்புக் கட்டணங்கள் போன்றவற்றில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி மாதம் 4 முறை ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறைக்கும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 

மேலும் உங்களது வங்கி கணக்கு திறக்கப்பட்ட கிளையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்கும்போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 5 ரூபாய் வசூலிக்கப்படும். 

வங்கிக் கணக்கு திறக்காத மற்ற கிளைகளில் (Non Home Branch) தினம் 25,000 ரூபாய் வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பணம் எடுக்கும்போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 5 ரூபாய் வசூலிக்கப்படும். 

மேலும் மூன்றாம் நபர் பணப் பரிவர்த்தனைகள் மூலமாக தினமும் 25,000 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு ரூபாய் 150 வரை வசூலிக்கப்படும். அதற்கு மேல் பணம் எடுக்க அனுமதியில்லை. 

சீனியர் சிட்டிசன்கள், யங் ஸ்டார், ஸ்மார்ட் ஸ்டார் கணக்குகளுக்கு தினம் 25,000 ரூபாய் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. 

சில்வர் சேவிங்ஸ்/சம்பள கணக்கிற்கும் இதே கட்டண முறை தான். கோல்டு பிரிவிலிஜ் சேவிங்ஸ்/ சம்பள கணக்கிற்கு மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். 

ஒரு வருடத்திற்கு 25 செக் லீப்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட மாட்டாது. அதற்கு மேல் ஒவ்வொரு 10 செக் லீப்களுக்கும் ரூ.20 கட்டணம் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையில் உள்ள விகிதங்களில் மேல் பட்டியலிடப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.

என ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அறிவித்துள்ளது 

அதிகாரபூர்வ அறிவிப்பு படிக்க

https://www.icicibank.com/managed-assets/docs/about-us/2021/website-notice-board.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback