Breaking News

ஒரே மாதத்தில் இந்தியர்களின் 20 லட்சம் கணக்கு முடக்கம்: காரணம் என்ன வாட்ஸ் அப் தகவல்

அட்மின் மீடியா
0

இந்தியாவில், கடந்த மே 15 முதல் ஜூன் 15 ஆம் தேதிக்குள் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சமூக வலைதளங்களை கட்டுப்படுத்துவதற்காக  புதிய டிஜிட்டல் கொள்கையினை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டு இருந்தது .இந்த சட்டங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் புதிய தொழில்நுட்ப விதிகளின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த பேஸ்புக், இந்தியாவில் மே 15 முதல் ஜூன் 15ம் தேதி வரை 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலேயே இத்தனை வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கணக்குகளில் இருந்து ஸ்பேம் குறுஞ்செய்திகள் அதிகளவில் அனுப்பப்பட்டிருக்கின்றன என வாட்ஸ்அப் தெரிவித்திருக்கிறது. 

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback